சனி, 25 நவம்பர், 2017

Pav Bhajji /பாவ் பாஜி

அவ்வப்போது சமைக்கும் அன்று பாவ் பாஜி எங்கள் வீட்டில் குழந்தைகளின் கொண்டாட்டம் ஆகிப்போகிறது.... ரெசிபி இதோ ...

தேவையான பொருட்கள் :

வேக வைக்க :
தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கு - 2
நறுக்கிய பீன்ஸ் ,கேரட் - 1 கப் 
பச்சை பட்டாணி - 1/ 4 கப் 

மசாலா செய்ய :
வெண்ணெய் - 5 ஸ்பூன்  
பெரிய வெங்காயம் - 1 பெரியது 
சீரகம் - 1 ஸ்பூன் 
தக்காளி -2
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
கரம் மசாலாத் தூள் - 1/4 ஸ்பூன் 
மல்லித்தூள் -1/2 ஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் 
உப்பு - தேவைக்கு 
டோஸ்ட் செய்ய :
buns - 10 pieces
வெண்ணெய் - தேவைக்கு

செய்முறை :

  • வேகவைக்க கொடுக்கபட்டவற்றை உப்பு , தண்ணீர் செய்து ,குக்கரில் 6-7 விசில் விட்டு  வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் .
  • பின்னர் pan ல் வெண்ணெய் விட்டு ,உருகியதும் சீரகம் சேர்த்து,பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
  • இதனுடன் இஞ்சி பூண்டு விழுது ,சேர்த்து மீண்டும் வதக்கவும் .
  • இதனுடன் பச்சை  மிளகாய்  சேர்த்து வதக்கவும் .
  • பின் தக்காளியும் சேர்த்து ,அது நன்கு மசியும் வரை வதக்கவும்..
  • இதனுடன் மல்லித்தூள் ,மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் , கரம் மசாலாத்தூள் , உ[ப்பு ,சேர்த்து கிளறவும் .
  • இதனுடன் வேக வைத்த காய்கறிகளை சற்று மசித்து சேர்க்கவும் .
  • மசாலா நீர்க்கவும் இல்லாமல் , கெட்டியாகவும் இல்லாமல் வேக வைத்த நீர் சேர்த்துக் கொள்ளவும் .
  • உப்பு . காரம் சரி பார்த்துக் கொள்ளவும் .
  • மல்லித்தழை , வெண்ணெய் சேர்த்து மீண்டும் கிளறி விடவும்
  • மசாலா தயார் ...
  • bun ஐ இரண்டாக வெட்டி வெண்ணெய் தடவி , தோசை கல்லில்  இருபுறமும்டோ ஸ்ட் செய்து எடுக்கவும் 
  • மசாலா , நறுக்கிய வெங்காயம் , bun உடன் சூடாக பரிமாறவும் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...