திங்கள், 6 நவம்பர், 2017

கருப்பட்டி காபி /karuppatti coffee


இந்த மழை காலத்திற்கு ஏற்ற உடலுக்கு உகந்தது இந்த கருப்பட்டி காபி .
கருப்பட்டி இரத்தத்தை சுத்திகரித்து ,உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் .
தேவையான பொருட்கள் :
கருப்பட்டி வெல்லம் -
மல்லி விதைகள் -2 ஸ்பூன் 
மிளகு - 1/2 ஸ்பூன் 
ஏலக்காய் -8
சுக்கு -1 துண்டு 

செய்முறை :

  • கருப்பட்டி வெல்லத்தை உடைத்து பாகு காய்ச்சி வடிகட்டி வைக்கவும் .
  • சுக்கை தட்டி தனியே வைக்கவும் .
  • வெறும் வாணலில் மல்லி,மிளகு ,சேர்த்து வறுக்கவும் .வாசனை வந்த பிறகு ஏலக்காய் ,சுக்கு சேர்த்து லேசாக வறுத்து ஆறவிடவும் .
  • பின் இவற்றை மிக்சியில் பொடித்துக்  கொள்ளவும் ...
  • ஒரு பாத்திரத்தில்  2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க  விடவும். 
  • கொதிக்கும் நேரம் வாசனை மணக்கும் . தண்ணீர் 1  1/2 டம்ளர் ஆக சுண்டியதும் அடுப்பை அனைத்து ,வடிகட்டவும்  ..
  • இதனுடன் கருப்பட்டி பாகு உங்கள் இனிப்பு சுவைக்கு ஏற்ப சேர்த்து கலக்கி சூடாக பரிமாறவும் ...
  • சுவையான இதமான கருப்பட்டி காபி தயார் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...