வெள்ளி, 1 செப்டம்பர், 2017

பொரி உருண்டை /pori urundai

என் செல்ல குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது பொரி உருண்டை . உடலுக்கும் உகந்தது .ஸ்நாக்ஸ் ஆக பள்ளிக்கும் கொடுக்கலாம் ..

தேவையான பொருட்கள் :

அவல் - 3 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - சிறிது

செய்முறை :

  • முதலில்அவல் பொறியை சுத்தம் செய்துகொள்ளவும் 
    • வெல்லத்துடன் 1/2 கப் தண்ணீர்,ஏலக்காய்த்தூள்  சேர்த்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி,பாகு காய்ச்சவும் .
    • சிறு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் எடுத்துக்கொள்ளவும் .அதில் காய்ச்சிய பாகை சில துளிகள்  விடவும் .அந்த பாகுவை திரட்டினால் கரையாமல் வரவேண்டும் .பாகுவை பந்து போல திரட்டி கிண்ணத்தில் வீசினால் ,சத்தம் வரவேண்டும் இதுதான் பாகுவின் பதம் .
    • அவலுடன் இந்த பாகுவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ,கிளறவும். நன்கு கிளறிய பின் ,சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடிக்கவும் .
    • பாகு பதம் சரியாக இல்லையென்றால் ,உருண்டைகள் பிடிக்க வராது . இதற்கு வெல்லபாகு காய்ச்சுதல் மிகவும் முக்கியம் .
    • விருப்பப்பட்டால் ,பொரியுடன் ,பொட்டுகடலையும் சேர்த்து உருண்டைகள் பிடிக்கலாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...