இறால்65 மிகவும் அருமையா இருக்கும் .முக்கியமா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்
தேவையான பொருட்கள் :
இறால் - 3/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது -1 1/2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் பொடி - 2 1/2 ஸ்பூன்
கார்ன் மாவு -4-5 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் -1/2 டீ ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் - பொறிக்க
செய்முறை :
- இறாலை சுத்தம் செய்து தனியே வைக்கவும்
- ஒரு அடிகனமான பாத்திரத்தில் ,இறால் ,இஞ்சி பூண்டு விழுது ,கரம் மசாலாத்தூள் ,மஞ்சள்தூள் ,மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,உப்பு ,சிறிது தண்ணீர் (அதிகம் சேர்க்க வேண்டாம் )எல்லாம் சேர்த்து இறாலை வேகவிடவும் .தண்ணீர் சுண்டியதும் நிறுத்தவும் .
- சூடு ஆறியதும் ,இதனுடன் கார்ன் மாவு சேர்த்து பிசைந்துகொள்ளவும்
- கடாயில் எண்ணெய் சூடானவுடன் இறாலை பொரித்து எடுக்கவும் .
- சுவையான மொருமொரு இறால் 65 தயார்
Lovely Sangeetha
பதிலளிநீக்குthanks a lot ma
பதிலளிநீக்கு