சனி, 27 செப்டம்பர், 2014

முயல் கறி குழம்பு/muyal curry kuzhambu / rabbit kuzhambu

என் கணவரின் மிக நீண்ட நாள் ஆசை முயல் கறி சாப்பிட வேண்டும் என்று .. அப்படி முயல் கறி கிடைத்தும் செய்து பார்த்தேன் .. நன்றாகவே இருந்தது . இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது , இதை நன்கு வேகவைப்பது அவசியம் 

தேவையான பொருட்கள் :

முயல் கறி - 1 கி 
சின்ன வெங்காயம் - 15(இரண்டாக நறுக்கியது ) 
தக்காளி - 1 (பெரியது )
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன் 
பட்டை - 1 
கிராம்பு - 1
ஏலக்காய் - 1 
பச்சை மிளகாய் - 1 
மிளகாய்த்தூள் - 1 மற்றும் 1/2 ஸ்பூன் 
மல்லித்தூள் - 1 ஸ்பூன் 
மஞ்சள்தூள் -1/2 ஸ்பூன் 
மிளகுத்தூள் - 1 ஸ்பூன் 
உப்பு - தேவைக்கு 
கரம் மசாலா தூள் - கால் ஸ்பூன் 
கருவேப்பிலை - 1 கொத்து 
மல்லித்தழை - கொஞ்சம் 

செய்முறை :

  • முதலில் முயல் கறியை நன்கு சுத்தம் செய்து ,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி அலசி விடவும் .
  • பின் குக்கரில் , எண்ணெய் விட்டு பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் , சேர்த்து பின் வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் .
  • பின் தக்காளி சேர்த்து வதக்கவும் .இதனுடன் முயல் கறியும் சேர்த்து மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் ,மஞ்சள்தூள் ,கரம் மசாலா தூள் , மிளகுத்தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும்  .
  • பின் அதனுடன்  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து , 5 - 6 விசில் வரை வேகவிடவும் . இறுதியாக மல்லித்தழை சேர்க்கவும் .கறியின் தன்மையை பொறுத்து இதன் வேகும் நேரம் வேறுபடலாம் . அப்படி வேகவில்லை எனில் மேலும் சிறிது நேரம் வேகவைக்கவும் .
  • நன்கு வெந்தபின் தான் இதன் சுவை சிறப்பாக இருக்கும் . இல்லாவிடில் இதன் வாடை அப்படியே இருக்கும் .

மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடுகையில் முயல் கறியில் கொலஸ்ட்ராலானது மிகவும் குறைவாக உள்ளது. எனவே எடையை பராமரிக்க நினைப்போர் முயல் கறியை அச்சமின்றி சாப்பிடலாம்.

3 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...