புதன், 22 ஜனவரி, 2014

சன்னா மசாலா (easy channa masala)

மிகவும் சுலபமான முறையில் சன்னா மசாலா செய்யலாம் .. 

தேவையான பொருட்கள் :

வேக வைத்த சன்னா - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்  
சின்ன வெங்காயம் - 6 
காய்ந்த மிளகாய் - 2 
தக்காளி - பாதி
புளி - 1 இஞ்ச்
இஞ்சி -1 துண்டு
பட்டை - 1 சிறிய துண்டு (optional)

தனியாக அரைக்க :
தேங்காய் - 2 துண்டுகள்
முந்திரி - 2
பொட்டுகடலை - 1 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1/2 ஸ்பூன்
கிராம்பு - 1
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1/2 ஸ்பூன்

செய்முறை :

  • முதலில் வெங்காயம் ,தக்காளி ,புளி,இஞ்சி ,பட்டை இவற்றை நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும் 
  • பிறகு தாளிக்க கொடுத்தவற்றை போட்டு ,தாளித்து அதனுடன் இந்த அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும் .
  • பிறகு இதனுடன் சன்னா சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து ,மூடி வேகவைக்கவும் .
  • இறுதியாக அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து , இதில் சேர்த்து 2 நிமிடங்கள் கழித்து நிறுத்தவும் . 
  • சுவையான சன்னா மசாலா தயார் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...